sparrow-conservation

Sparrow Conservation Foundation

செம்மை மெய்யியல்

செம்மை மெய்யியல் - பயிற்சி வகுப்பு!

சென்ற மாதம் நிகழவிருந்த மெய்யியல் வகுப்பு தவிர்க்க இயலாத காரணங்களால் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவ்வகுப்பு மீண்டும் வருகின்ற ஜூன் மாதம் 14 முதல் 18 தேதி (14/06/2019 - 18/06/2019) வரை ஐந்து நாட்களுக்கு நடைபெற இருக்கிறது. விருப்பமுள்ளோர் பதிவு செய்திடுங்கள்!

பதிவுக்கு:
பாலு - 9344078006

செம்மை மெய்யியல் என்பது இறையியலாகிய மூலத்திலிருந்து அண்டத்தையும் மனிதர் உள்ளிட்ட உயிரினங்களையும் உள்வாங்குதல் ஆகும். இதுவே தமிழ் மரபு மெய்யியல் நெறி.

மூலநூல், தோற்றுவாய், யாம், ஊழிநூல், கூடல், உரை நூல் வரிசை, செம்மை நிலம், முப்பொருள் உள்ளிட்ட நூல்கள் இந்த நெறியினை உணர்ந்து பதிவு செய்யப்பட்டவை.

இவற்றை எழுத்தில் பதிவு செய்த ம.செந்தமிழன், செம்மை மெய்யியல் எனும் கருத்தினை விளக்குவது இப்பயிற்சி வகுப்பின் நோக்கம்.

இம்மெய்யியலைக் கற்க விரும்புவோர் பங்கேற்கலாம். ஐந்து நாட்களும் வைகறைப் பொழுது வகுப்புகளும் அந்தி வகுப்புகளும் நிகழும். பல்வேறு நெறிமுறைகள் பகல் பொழுதில் கற்பிக்கப்படும்.